நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி
வேலைத்திட்டத்தினால் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள
பாதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (22)
நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிட்டிபனை
மீனவர்கள் பங்குபற்றிய இந்த ஆர்ப்பாட்டம் களப்பு அருகில் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக
அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
நீர்கொழும்பு
களப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் கடோலான தாவரங்கள் அழிவிற்குள்ளாவதாகவும்,
இதன் காரணமான மீன்கள்
பாதிக்கப்படுவதாகவும், பாரம்பரியமாக களப்பில் மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ள
மீனவர்கள் எதிர்காலத்தில் தொழிலை
மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும், களப்பின் ஒருபகுதியை மண் இட்டு நிறைத்து வாகன
தரிப்பிடம் அமைப்பது மக்களின் பணத்தை வீண் விரயமாக்கும் செயல் எனவும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.


No comments:
Post a Comment