நீர்கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும்
வழக்கொன்று சம்பந்தமாக நீர்கொழும்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து ஆண் சட்டத்தரணி
ஒருவருக்கும் பெண் சட்டத்தரணி ஒருவருக்குமிடையில்
ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து ஆண் சட்டத்தரணி பெண் சட்டத்தரணியை அச்சுறுத்தி
தாக்க முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக நீரகொழு;பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணை
செய்யப்படும் வழக்கொன்று தொடர்பாக இருவருக்குமிடையில் ஏற்பட்ட வார்த்தை பரிமாற்றம்
இந்த பிரச்சினைக்கு காரணம் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த
வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
சமன் திலக்க வெலிவிட்டவின் ஆலோசனையின் பேரில் ப ல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சம்பத் திசாநாயக்க தலைமையிலான
குழுவினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment