நீர்கொழும்பு
பீச் பார்க் கடல் பகுதியில் விநோதப் பயணம் வந்த நிலையில் நீராடிக் கொண்டிருந்த மாலபே
உயர் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களில்
ஒருவர் கடலில் மூழ்கி மரணமாகியுள்ளார்.
மொனராகல,
பொத்துவில் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரோஹன நவீன்ந்ர வீரசேகர என்ற மாணவனே கடலில்
மூழ்கி இறந்தவராவார்.
மாலபே
உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில் இன்ஜினியர்
பாடநெறியைத் தொடரும் மாணவர் குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நீர்கொழும்பு பீச்
பார்க் கடல் பகுதியில் விநோதப் பயணம் வந்த நிலையில் நீராடிக் கொண்டும் விளையாடிக்கொண்டும்
இருந்துள்ளனர்.
சம்பவத்தில் பலியான மாணவர் தனது உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்த மணலை அகற்றுவதற்காக
மீண்டும் கடல் பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது திடீரென்று வந்த பாரிய் அலை அவரை கடலுக்கு
இழுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படை
வீரர்கள் மற்றும் உயிர்க் காப்பு வீர்கள் இணைந்து
சடலத்தை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம்
தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment