குடும்ப பிரச்சினை காரணமாக 36 வயதுடைய பெண்னொருவர் நிர்கொழும்பு கடலில்
பாய்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நுவரெலியா முன்செல்லை வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த
ராமலிங்கம் தேவிகா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே தற்கொலை செய்துகொண்டவராவார்.
நீண்டகாலமாக நீர்கொழும்பில் வசித்து வரும்
இப்பெண் தனது கணவருடன் ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை கடலில்
பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினர் மற்றும்
பொலிஸார் இணைந்து சடலத்தை மீட்டனர்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் பிரேத பரிசோதனை
செய்தார்.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment