Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, September 11, 2016

சவூதி அரேபியாவில் 'மாஸ்' உயிர்கொள்ளி வைரஸினால் 30 வயது நபர் மரணம் தொற்று நோய் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் நல்லடக்கம் செய்யுமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

சவூதி அரேபியாவில்  மாஸ் எனப்படும் உயிர்கொள்ளி வைரஸினால் பாதிக்கப்பட்டு மரணமான எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.ருக்மல் லால் (30 வயது) என்பவரது சடலத்தை குறித்த வைரஸ்; பரவாமல் தடுக்கும்  வகையில் தொற்று நோய் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் நல்லடக்கம் செய்யுமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸந்த எப்பிடவல கடந்த வெள்ளிக்கிழமை (9)  உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி சவூதிஅரேபியாவில் மரணமான ருக்மாலின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதை நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரி  எம்.என். ரூஹுல் ஹக் நிராகரித்தார். இது தொடர்பான  பிரச்சினை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நீதிமன்றத்தால்  சுகாதார சேவை பணிப்பாளர நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது.
புணிப்பாளர் நாயகத்தினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன், தொற்று நோய் தொடர்பான வைத்தியர் சமித்த கினிகே உட்பட ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சடலத்தை திறக்காமல் தொற்று நோய் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் அடக்கம் செய்வது நல்லத என  இந்த குழு பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சடலத்தை திறக்காமல்  இறுதிச் சடங்கு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.


No comments:

Post a Comment