இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் வருடாந்த இளைஞர் மாநாடு (மஜ்லிஸ் குத்தாமுல் அஹ்மதியா) நேற்று ஞாயிற்றுக்கிழமை (16-10-2016) காலை முதல்
மாலை வரை நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள
மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்வில் நாடெங்கிலும் உள்ள கிளை ஜமாஅத்துக்களைச்
சேர்ந்த இளைஞர்கள்; கலந்து கொண்டனர். நிகழ்வில் பேச்சுப் போட்டிகள், உர்து நஸம், குர்ஆன்
ஓதுதல், வினாவிடைப் போட்டி, ஞாபக சக்திப் போட்டி உட்பட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்வின் இறுதியில் போட்டிகளில்
வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் தேசிய தலைவர்.
நாஸிர் அஹ்மத் , தேசிய உப தலைவர் எம்;.ஏ.அனீஸ்,
தேசிய இளைஞர் அணித் தலைவர் ஆர்.ஏ.முஹம்மத் பாஹிம், மௌலவிமார்கள் உட்பட பெரும்
எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பு M.Z. Shajahan
No comments:
Post a Comment