நாட்டில்
சட்டம் தற்போது காட்டுச் சட்டமாக உள்ளமை கவலை தருகிறது. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்து இடம்பெறுகிறது. சட்டம் தற்போது அரசியல்
மயப்படுத்தப்பட்டுள்ளதாக நான் மட்டுமல்ல ஜனாதிபதியும்
கூறுகிறார். நாட்டில் சட்டத்தை நிலை நிறுத்த வேண்டிய நிறுவனங்கள் யாவும் அரசியல் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படுகின்றன.
ஜனாதிபதிக்கு காலம் கடந்தாவது அது புரிந்துள்ளமை நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை (25) மாலை தெரிவித்தார்.
2001 ஆம் ஆண்டு நீர்கொழும்பில் இடம்பெற்ற விபத்தொன்றில்
நபர் ஒருவர் வாகனத்தில் மோதி மரணமான சம்பவம்
தொடர்பாக கொலை குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி
அமைச்சர் சரத்குமார குணரத்னவை நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட வந்தபோது ஊடகவியலாளர்கள் கேட்ட
கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி
மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியாலாளர்கள் கேட் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளிக்கையில்
கூறியதாவது.
நாட்டில்
தற்போது நல்லாட்சி நிலவுகிறதா? சொல்வது ஒன்று
செய்வது வேறொன்று. நாங்கள் அன்று வடக்கு கிழக்கில் குண்டுச் சத்தங்களை
நிறுத்தியமையே நல்லிணக்கமாகும். இப்போது என்ன நடக்கிறது? அங்கும் வெடிச்சத்தம். இங்கும்
வெடிச்சத்தம் கேட்கிறது. வடக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த
சம்பவம் எனது காலத்தில் இடம்பெற்றால் மஹிந்த ராஜபக்ஷ கொலை செய்தார் என்று கூறுவார்கள். இல்லையேல் மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்றதாக கூறுவார்கள்.
இல்லையேல் இளைஞர்களை சுட்டதற்காக என்மேல் குற்றச்சாட்டு சுமத்துவார்கள்.
கோப்
கமிட்டியின் பிரச்சினை தெளிவாதகத் தெரிகிறது. இதிலிருந்து மீள முடியாமல் அவர்கள் தவிக்கிறார்கள்.
தப்பிக் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் கோப் கமிட்டியில் இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment