
நீர்கொழும்பு இளம் குற்றவாளிகள் சீர்த்திருத்த மத்திய நிலையத்திலிருந்து அறுவர் இன்று சனிக்கிழமை அதிகாலை காலை 3.30 மணியளவில் தப்பியோடியுள்ளதாக நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்க தெரிவித்தார்.
போதைப் பொருள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுக்காக நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த மத்திய நிலையத்தில் இளைஞர்கள் புனரமைப்புக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆறுபேர் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடிய கைதிகளை கைது செய்வதற்காக பொலிஸார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இதுதொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment