Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, November 21, 2016

தனியார் வகுப்புக்கு வந்த 13 வயது மாணவியை நிர்வாணமாக்கி பாலியல் துஸ்பிரயோகம் செய்த அதிபருக்கு விளக்கமறியல்

நீர்கொழும்பு செத்தப்பாடு பிரதேசத்தில்  அமைந்துள்ள தனியார் வகுப்புக்கு கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை கற்பதற்கு வந்த 13 வயது பாடசாலை மாணவிவை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள  தனியார் வகுப்பின் அதிபரை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த எபிட்டவல உத்தரவிட்டார்.
பலபிட்டி, மஹகராவ பிரதேசததைச் சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.

சந்தேக நபரை நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸார் கைது செயது மன்றில் ஆஜர் செய்தனர்.
சம்பவம் இடம்பெற்ற அன்று வகுப்பு முடிவடைந்த பிறகு  சந்தேக நபர் ஏனைய மாணவர்களை தனியார் வகுப்பிலிருந்து வெளியேற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மேலதிக பாடங்களை  கற்பிப்பதாகக் கூறி வகுப்புக்கு அருகில் உள்ள அறையொன்றுக்கு மாணவிவைய அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மாணவியின் ஆடைகளை  களைத்து நிர்வாணமாக்கியுள்ளார். அந்த தனியர் வகுப்புக்கு வந்திருந்த மாணவி ஒருவரின் தாயார் இதனை காணவே பதற்றமடைந்த சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த போது சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் வந்து சரணடைந்துள்ளார்.
இந்த வழக்கு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.



No comments:

Post a Comment