Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, November 21, 2016

கர்ப்பிணி மனைவிக்கு கொடுப்பதற்காக வாங்கிய பால் பக்கற்றில் புழுக்கள்

 நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கர்ப்பிணி மனைவிக்கு கொடுப்பதற்காக வைத்தியசாலையின் முன்பாக அமைந்துள்ள கடையொன்றில்  பால் பக்கற்றை வாங்கிய நபர் ஒருவர் குறித்த பால் பக்கற்றில் புழுக்கள் இருந்தாக நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை அடுத்து இன்று திங்கட்கிழமை குறித்த கடைக்குச் சென்ற நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவினர் அந்த கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பால் பக்கற்றுக்கள் சிலவற்றை  பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

 இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,



முறைப்பாடு செய்த நபர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துளள தொழிற்சாலையொன்றில் தொழில்புரிபவராவார்.  கர்;ப்பிணியான அவரது மனைவி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் குழந்தை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆம் திகதி (15-11-2016)  அந்த ஊழியர் தனது மனைவிக்கு  குறித்த கடையில் 5 பால் பக்கற்றுக்களை வாங்கி கொடுத்து விட்டு தொழிலுக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவரது மனைவி தொலைபேசி கூலமாக தொடர்பு கொண்டு பால் பக்கற்றை உடைத்து அருந்தும் போது அதில் புழுக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அங்கு வந்த அந்த ஊழியர் 5 பால் பக்கற்றுக்களையும் எடுத்துக்கொண்டு  அந்த கடைக்குச் சென்று பாத்திரம் ஒன்றில் மனைவி அருந்திய பால் பக்கற்றை உடைத்து ஊற்றியுள்ளதோடு அதனை வீடியோ செய்துள்ளார். அந்த பால் பக்கற்றில்;  புழுக்கள் இருப்பதை கடைகாரரும் ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த ஊழியர் மேலும் ஒரு பால் பக்கறறையும் உடைத்து ஊற்றியபோது அதிலும் புழுக்கள் இருந்துள்ளன. பின்னர் கடையில்  விற்பனைக்கு வைக்கப்படிருந்த பால் பக்கற்று ஒன்றை உடைத்து பார்த்தபோது அதிலும் புழுக்கள் இருந்துள்ளன.


இந்நிலையில் இது தொடர்பாக நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து இன்றைய தினம் அந்த கடைக்கு வந்த பொது சுகாதார பிரிவினர் பால் பக்கற்றுக்கள் சிலவற்றை  பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.




No comments:

Post a Comment