Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, November 17, 2016

நீர்கொழும்பில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பொரல்லையைச் சேர்ந்த நபர் கைது

 நீர்கொழும்பு மற்றும் அயற் பிரதேசங்களில்  திருட்டுச் செயல்கள் பவவற்றில் ஈடுபட்ட நபர் ஒருவரை நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
பொரல்லை, சஹஸ்புர பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, அந்த சந்தேக நபர்களில் ஒருவரை கைது செய்துள்ளனர்.


புலத்சிங்களகே திலின சம்பத் குரே எனப்படும் சுரேஸ் (29 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளவராவார். 

கடந்த ஜுலை மாதம் 21 ஆம் திகதி  நீர்கொழும்பு ராஜபக்ஷ பூங்காவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவீன ரக காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து 5 இலட்சத்து 66 ஆயிரம் ரூபா பணமும் விலை உயர்ந்த  இரண்டு  செல்லிடத் தொலைபேசிகளும் திருடிச் செல்லப்பட்டுள்ள சம்பவம்  தொடர்பாக சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸார் திருடப்பட்ட தொலைபேசிகளின் தரவுகளை ஆய்வு செய்து  சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் மேலும் பல விடயங்கள் தெரிய வந்துள்ளது. சநதேக நபரின் மனைவியின் தந்தை (மாமனார்) குறித்த காரின்  பின் பக்க கண்ணாடியை உடைத்து, காரிலிருந்த பெண்கள் பாவிக்கும் கைப்பையை எடுத்துள்ளார். 
சந்தேக நபரும் அவரது மாமனாரும் பொரல்லையிலிருந்து நீர்கொழும்புக்கு வந்து திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சந்தேக நபரும்  அவரது மனைவியும், மனைவியின் தந்தையான  சந்தேக நபரின் மாமனாரும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களாவர். திருடிய பணத்தையும் , செல்லிடத் தொலைபேசிகளை விற்பனை செய்து பெற்ற பணத்தையும் கொண்டு   இந்த மூவரும் போதைப் பொருள் பாவிப்பதற்கு பயன்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களினால் திருடப்பட்ட பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி ஒன்றையும், திருடப்பட்ட செல்லிடத் தொலைபேசிகள் இரண்டையும், பெண்கள் பாவிக்கும் கைப்பை ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


No comments:

Post a Comment