சீதுவை
சாந்த மரியாள் தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தின்போது தேவமாதா சொரூபத்துடன்
பக்தர்கள் ஊர்வலமாக வந்த வீதியில் வாணவெடிகளை கொளுத்திய குழுவினருக்கு எதிராக,
ஊர்வலமாக வந்தவர்களில் ஒரு குழுவினர்
பேசியபோது, அந்தக் குழுவினரை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக
நபர்கள் அறுவரை எதிர்வரும் 16 ஆம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் கே.பி.குணதாச நேற்று
திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
பெண்
உட்பட மூவரை தாக்கியமை, பெரஹரவை பார்க்க வந்த பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை,
பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள்
சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது.
தாக்கப்பட்டவர்களில்
ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக முறைப்பாட்டில்
குறிப்பிடப்பட்டடிருந்தது. கைது
செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெற்கு தம்பதூரய மற்றும் சீதுவை பிரதேசங்களைச்
சேர்ந்தவர்களாவர்.
சந்தேக
நபர்களை சீதுவை பொலிஸார் மன்றில் ஆஜர் செய்தனர்.
No comments:
Post a Comment