Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, December 13, 2016

டுபாயில் பணிப் பெண்ணாக பணிபுரிந்து நாடு திரும்பிய பெண்ணின் நகைகளை திருடிய இரு பெண்களுக்கு விளக்கமறியல்

டுபாயில் பணிப் பெண்ணாக பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய நிக்கவரெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணின் கைப்பையிலிருந்த 42 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சிறிய மோதிரங்கள் மற்றும் பணத்தை திருடிய இரு பெண்களை நீர்கொழும்பு பதில் நீதவான் கே.பி.குணதாச 14 ஆத் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கொழும்பு மற்றும் புளத்சிங்கள பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர். சந்தேக நபர்களான பெண்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய
பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்தபோது அவரின் கைப்பையை திறந்து நகையையும் பணத்தையும் திருடியுள்ளனர்.

கட்டுநாயக்க வமான நிலைய பொலிஸார் சந்தேக நபர்களான பெண்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

No comments:

Post a Comment