இந்த
நல்லாட்சி அரசாங்கத்தில் வரிகள் மற்றும் தண்டப்
பணம் அதிகரிக்கப்பட்டிருப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதற்கு எதிராக வீதிகளில்
இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அதிகரிக்கப்பட்டுள்ள
போக்குவரத்து தண்டப் பணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட 25 பேர் கைது
செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்
சாட்டுக்கள் அரசாங்கத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டு பொலிஸாரால்
சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகும்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் பெரும்
அச்சத்துக்கு உளளாகியுள்ளார்கள். மக்களை
அச்சுறுத்தி, சிறையிலடைத்து மக்களை அடக்க முடியும் என் நினைப்பது நலலாட்சி அரசாங்கத்தின்
தவறான போக்கையே அது காட்டுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
போக்குவரத்து
சட்டதிட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக அதிகரிக்கப்பட்டுள்ள போக்குவரத்து
அபராத் தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட
மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 25 பேரின் வழக்கு நேற்று (28) நீர்கொழும்பு
நீpதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதனை பார்வையிட நீதிமன்றம் வந்த போதே பாராளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
ஆவர்
அங்கு ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
இந்த
அரசாங்கம் மக்களின் கருத்துக்களை கேட்பதில்லை. கருத்தில் எடுப்பதில்லை. மாறாக இந்;த நல்லாட்சி அரசாங்கம் வரிகளை அதிகரித்து, தண்டப்
பணத்தை அதிகரித்துள்ளது
அரசாங்கத்தில்
உள்ள அமைச்சர்களின் கருத்துப்படி மக்களுக்கு எந்தவிதப் பிரசசினையும் கிடையாது. வரிகளை
அதிகரித்தால் மக்களுக்கு அது பிரச்சினை இல்லை. மத்திய வங்கி ஆளுனரிடம் இதுவரை விசாரணை
மேற்கொள்ளப்படவில்லை. ஆயினும் எமது மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன்
காரணமாக சிறையிலடைக்கப்பட்டனர்.
இன்று
நாட்டைப் பிரிக்கும் புதிய அரசியலமைப்பு திட்டம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. அதிகாரப்
பகிர்வை மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு நாட்டை துண்டாகப் பிரிக்கப் பார்க்கிறார்கள்.
இந்த நாட்டடை நாசமாக்க முயற்சி செய்யப்படுவதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கும்போது
மக்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என அரசு கூறுகிறது.
துறைமுகத்தை
விற்பனை செய்த பிறகே துறைமுக அமைச்சர் ஊடகங்கள் மூலமாக அடுத்த நாள் அதனை தெரிந்து கொண்டார்.
அமைச்சர் மலிக் சமரவிக்ரம கையொப்பமிட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக அவரது பிரதி அமைச்சருக்கு
ஒன்றும் தெரியாது. இது போன்று செயற்படும் அரசு தொடர்பாக எமக்கு நம்பிக்கை இல்லை என்றார்.
No comments:
Post a Comment