Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, December 29, 2016

25 ஆயிரம் ரூபா தண்டப் பணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்: மாகாண சபை உறுப்பனர்கள் உட்பட 25 பேருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

போக்குவரத்து சட்டதிட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக அதிகரிக்கப்பட்டுள்ள போக்குவரத்து தண்டப் பணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகள்  நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கியமை உட்பட பல்வேறு குற்றசசாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்த ஹரிச்ந்திர, லலந்த குணசேகர உட்பட 25 பேரை நீர்கொழம்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த நேற்று (28) கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் தலா பத்தாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபா கொண்ட இரண்டு நபர்களின் சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டனர்.



குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மாதத்தின்  இறுதி ஞாயிற்றுக்கிழமையில் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் சந்தேக நபர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
 சுந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை,  பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, பொலிஸாரின் கடைமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை,  பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியமை, இரண்டு பேரை கடத்திச் சென்று தாக்கியமை  உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.




சந்தேக நபர்கள் 25 பேரும் இன்று காலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். சந்தேக நபர்களின் உறவினர்கள், நண்பர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் என பல நூற்றுக் கணக்கானோர் நீதிமன்றிற்கு வருகை தந்திருந்தனர். அத்துடன் இந்த வழக்கு விசாரணையை பார்வையிட பிரதி அமைச்சர் நிமல் லான்ஸா, பாராளுமன்ற உறுப்பினர்களான , நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, மேல் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் வருகைத் தந்திருந்தனர்.

இந்த வழக்கு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment