Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, January 3, 2017

கட்டானையில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தரின் ரிவோல்வரை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் உட்பட நான்கு பேர் கைது: 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்பு

கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட் கட்டியல பிரதேசத்தில் கடந்த மாதம் 25 ஆம் திகதி  இரவு பொலிஸ்; உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கி ரிவோல்வர் ஒன்றை பறித்துச் சென்றமை உட்பட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட ரிவோல்வர், மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கைப்பற்றியுள்ளதாக நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்க நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

கட்டானை பொலிஸ் நிலையத்தில் ஊடகங்களுக்கு இது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்க  மேலும் பல விடயங்களை தெரிவித்தார்..
 பொலிஸ்; உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கி ரிவோல்வர் ஒன்றை பறித்துச் சென்றமை தொடர்பாக  கடந்த மாதம் 30 ஆம் திகதி மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  மேலதிக விசாரணையின் போது மேலும் ஒருவர் இன்று திங்கட்கிழமை  கைது செய்யப்பட்டார்.
ஏக்கல, பன்சல வீதியைச் சேர்ந்த கன்பகே தர்சன குமார, புத்தளம், அட்டவில்லுவ பிரதேசத்தைச் சேர்ந்த  எதிரிசிங்க ஆராச்சிகே புத்திக,  பண்டாரவல வீதி, கிந்திரிவெல பிரதேசத்தைச் சேர்ந்த எரியன் துட்டுவகே பிரதீப் குமார, ராஜகிரியவைச் சேரந்த் பிரசாத் ஹர்சன ஆகியோரே கைது  செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களாவர்.
சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்ட பொருட்களான ரிவோல்வர் ஒன்று, லெப்டொப், டெப், வீடியோ கமரா, நகைகள், பலகை வெட்டும் உபகரணம் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் சந்தேக நபர்கள் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும், லொறி ஒன்றையும், சந்தேக நபர்களினால் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.



பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு ரிவோல்வரை அபகரித்துச் சென்றமை தொடர்பாக  நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.  கட்டானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சோரத்ன தலைமையிலான குழு, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுபாஷ் பிரியதர்சனவின் தலைமையிலான குழு, நீர்கொழும்பு  சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர தலைமையிலான குழு,  கட்டானை குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சுகத் நிஹசன் எல்ல தலைமையிலான குழு ஆகிய பொலிஸ் குழுக்கள் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களில் மூவரை முதலில் கைது செய்துள்ளனர். பின்னர் நான்காவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயல் ஒன்றை செய்வதற்காக கடந்த மாதம் 25 ஆம் தகிதி சந்தேக நபர்களில் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கட்டானையில் வைத்து பாதுகாப்புப் பணியிலர் ஈடுபட்டடிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரால் சோதனை செய்யப்பட்ட போது சந்தேக நபர்கள் இருவரும் அந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு அவர்களில் ஒருவரிடமிருந்த ரிவோல்வரை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த  சம்பவம் தொடர்பாக நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணை மேற்கொண்ட போதே சந்தேக நபர்கள் கட்டுநாயக்கவில் விடுதியில் தங்கியிருந்து  பாரிய குற்றச் செயல்களை புரிந்து வந்துள்ளமையம், சந்தேக நபர்கள் கொள்ளைகபளில் ஈடுபட்டு போதைப் பொருள் பாவித்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.



கொச்சிக்கடை , வென்னப்புவ, கொஸ்லந்தை, கட்டானை, சீதுவை, கனேமுல்ல  ஆகிய பொலிஸ் பரிவிற்குட்பட்ட பகுதிகளில் பத்து கொள்ளைச் சம்பவங்களில் சந்தேக நபர்கள் சம்பந்தபட்டடுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சந்;தேக நபர்கள் நால்வரையும் மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்





No comments:

Post a Comment