Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, January 5, 2017

நீர்கொழும்பு வலய பாடசாலை அதிபர்களுக்கு நத்தார் பரிசு வழங்கிய மாணவர்கள்

நீர்கொழும்பு வலய  கல்விக் காரியாலயத்தினால் நீர்கொழும்பு வலய பாடசாலை அதிபர்களுக்காக   பமுனுகம கொன்ஸல்வேஸ் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (5) நடத்தப்பட்ட மாதாந்த கூட்டத்தின் போது அந்த பாடசாலையினால்  பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு நத்தார் பரிசு வழங்கப்பட்டது.
கொன்ஸல்வேஸ் கல்லூரியின் அதிபர் அருட் தந்தை ஆனந்த விதான மற்றும் கல்லூரியின் மாணவர் தலைவர்களினால் நத்தார் பரிசு வழங்கப்பட்டதுடன் நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.
படம்: மாணவர் தலைவர்களினால்  பாடசாலை அதிபர்களுக்கு பரிசு வழங்கப்படுவதையும். நிகழ்வில் பங்குபற்றிய அதிபர்களையும், நத்தார் தாத்தாவுடன் மாணவர் தலைவர்கள் நிற்பதையும் படங்களில் காணலாம்.








 செய்தி:- எம்.இஸட். ஷாஜஹான்
 

No comments:

Post a Comment