Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, January 11, 2017

வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தேசிய நல்லிணக்க வார நிகழ்வு (படங்கள்)

தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்கும்  பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சரவையின் அனுமதியுடன் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க வாரத்தையிட்டு கல்வி அமைச்சின் அறிவுறுத்தலின்படி நேற்று புதன்கிழமை  (11) நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.இஸட்.ஷாஜஹான் தலைமையில்  நிகழ்வொன்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சமாதானம், நல்லிணக்கம், ஒருமைப்பாடு என்பவற்றை வெளிப்படுத்தும்  நல்லிணக்கம்  தொடர்பான பிரகடனப்படுத்தை அமுல்படுத்துவதற்கான உறுதிமொழி ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் எடுக்கப்பட்டது.





படவிளக்கம் தேசிய ஒருங்கிணைப்பும் நல்லிணக்கமும் என்ற தலைப்பில் சத்தியகலா என்ற மாணவி உரை நிகழ்த்துவதையும், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியை நேசமலர் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.





No comments:

Post a Comment