ஊடகவியலாளரும்
கவிஞரும் எழுத்தாளருமான எம்.இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன் ஷாஜஹன்) 'தமிழ்ச் சுடர்' விருது
வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தடாகம்
கலை இலக்கிய வட்டம் கொழும்பு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சிலுள்ள அஞ்சல் அலுவலக தலைமையக் கட்டட கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை
(18-8-2018) நடத்திய பன்னாட்டு படைவிழாவில் கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு இந்த விருது
வழங்கப்பட்டது.
தடாகம்
கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புரவலர் ஹாசிம் உமர்,
குவைத் கவிஞர் வித்தியாசாகர் ஆகியோர் ஷாஜஹானுக்;கு விருதினை வழங்கினர்.
கலாநெஞ்சன்
ஷாஜஹன் இரண்டு கவிதைத் தொகுதிகளையும் , இஸ்லாமியப் பாடல்கள் தொகுதி; இரண்டினையும் எழுதி வெளியிட்டுள்ளதோடு, பல்வேறு இலக்கியப் போட்டிகளில்
தேசிய ரீதியில் பல விருதுகளையும் பரிசில்களையும் பெற்றுள்ளார்.
எம்.இஸட்.ஷாஜஹான்
வீரகேசரி, விடிவெள்ளி, மெட்ரோ நிவ்ஸ், தமிழ் மிரர் ஆகிய பத்திரிகைகளிலும், சக்தி தொலைக்காட்சி,
சிரஸ தொலைக் காட்சி சேவைகளின் ('நிவ்ஸ்ட் பெஸ்ட்') பிராந்திய நிருபராகவும் பணியாற்றி
வருகிறார். 1992 முதல் 1995 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்
பகுதி நேர நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன்
சுயாதீன தொலைக் காட்சி சேவையில் ஒளிபரப்பான 'முத்துச் சரம்' மற்றும் 'ரசிகர்
அரங்கம்' ஆகிய நிகழ்ச்சிகளுக்கு நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கை
அதிபர் சேவையை சேர்ந்த இவர் பயிற்றப்பட்ட உடற் கல்வி ஆசிரியராவார். கல்விமாணி, கல்வி
முதுமாணி ஆகிய உயர் பட்டங்களையும், இதழியல் துறையில் டிப்ளோமா (கொழும்பு பல்கலைகழகம்), மனித உரிமைகள்
தொடர்பான டிப்ளோமா, கணனித் துறையில் டிப்ளோமா என்பவற்றையும் இவர் பெற்றுள்ளதோடு சமாதான
நீதவானாகவும் உள்ளார்.
கொழும்பு
ஹமீத் ஹல் ஹுசைனி தேசியக் கல்லூரி. மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான எம்.இஸட்.ஷாஜஹான், இலக்கியம். ஊடகம் மற்றும் சமூக சேவை பங்களிப்புகளுக்காக
'சாமஸ்ரீ தேச கீர்த்தி' , 'கவியத் தீபம்', 'காவிய பிரதீப' ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment