பொதுமக்கள் நல்லுறவு பொலிஸ் குழுவில் (பிரஜா பொலிஸ் குழு) பிரதேச ஊடகவியலாளர்கள் சேர்த்துக்
கொள்ளப்படவுள்ளனர். பொதுமக்கள் நல்லுறவு பொலிஸ்
குழுவின் மூலமாக பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. இந்தக் குழுவில்
பிரதேச ஊடகவியலாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதன் காரணமாக நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு
சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்று மேல் மாகாண (வடக்கு) பிரதி பொலிஸ் மா அதிபர்
தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.
நீர்கொழும்பு
பிராந்தி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில்
இன்று சனிக்கிழமை (17) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில்
நீர்கொழும்பு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அத்துக்கோரல, உதவி பொலிஸ்
அத்தியட்சகர்; வை. ஜி. ஆர். எம். ரிபாத் ஆகியோர் பங்குபற்றினர்.
பிரதி
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
பொதுமக்கள் நல்லுறவு பொலிஸ் குழுவில் சமுர்தி உத்தியோகத்தர்கள்,
கிராம சேவகர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் உட்பட பலர் அங்கம் வகிக்கின்றனர். பிரதேச
ஊடகவியலாளர்களையும் குழுவில் இணைத்துக்கொள்வதன் மூலமாக அவர்களின் பங்களிப்பையும் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்த குழுவின் மூலமாக முக்கிய ஐந்து விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படுகிறது. தேசிய
பாதுகாப்பு, குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல், சட்ட விரோத மதுபானம் மற்றும் போதைப்
பொருளை கட்டுப்படுத்தல், சட்ட விரோத கருக்களைப்பு நிலையங்கள், விபசார நிலையங்கள் மற்றும்
மசாஜ் நிலையங்களை கட்டுப்படுத்தல், டெங்கு ஒழிப்பு மற்றும் சூழல், சுகாதார விடயங்கள்
என்பவை அவைகளாகும்.
பெற்றுக்
கொள்ளும் தகவல்கள் ஊடாக சுற்றிவளைப்புக்கள்
அதிகரிக்கப்படவுள்ளன. இனங்காணப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கவுள்ளோம். அத்துடன் பாடசாலை மாணவர்களை போதைப் பொருட்களில்
இருந்து பாதுகாப்பது தொடர்பான வேலைத்திட்டம்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
No comments:
Post a Comment