குவைத்தில்
பணிப் பெண்ணாகச் சென்ற பெண் ஒருவர் மர்மமான
முறையில் மரணமான நிலையில் இறந்தவரது சடலம் கடந்த வெள்ளிக்கிழமை (30-11-2018) காலை விமானம்
மூலமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்ததை
அடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு
சனிக்கிழமை (1) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெயாங்கொடை , மாரபொல பிரதேசத்தைச் சேர்ந்த வித்தான
குருப்பு ஆராச்சிகே சியாமளி (வயது 41) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே குவைத்துக்கு பணிப்பெண்ணாக
சென்ற நிலையில் சடலமாக அனுப்பி
வைக்கப்பட்டவராவார்.
குறித்த
பெண் நீண்ட காலமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்ணாக தொழில் செய்துள்ளார். இந்த
வருடம் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி குவைத்துக்கு
பணிப் பெண்ணாகச் சென்றுள்ளார். இந்நிலையில் தான் பணி செய்யும் வீட்டில் தனக்கு பிரச்சினை
உள்ளதாகவும், தான் அங்கு கொடுமை செய்யப்படுவதாகவும் அவர் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு
அறிவித்துள்ளார்.
கடந்த
23-11-2018 அன்று அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த வித்தான குருப்பு ஆராச்சிகே சியாமளியின் மகன் எரங்க குமார (24 வயது) கூறுகையில்,
எனது தாயார் தற்கொலை செய்து கொள்வதற்கு எந்தவித காரணமும் கிடையாது. அவர் தொழில்
செய்யும்; வீட்டில் எனது தாயாருக்கு பிரச்சினை உள்ளது. அவரது மரணத்தில் எமக்கு சந்தேகம்
உள்ளது. எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று
தெரிவித்தார்.
இறந்த
பெண்ணின் சகோதரன் சுசந்த குமார (39 வயது) தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்;, அவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர்
பணியாற்றும் வீட்டு எஜமானி தனது சகோதரியை தாக்கியுள்ளார் எனவும், அந்த வீட்டு எஜமானர் பொலிஸில் பணியாற்றுபவர் எனவும்,
தனக்கு எதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தனது
வீட்டுஎஜமானாரே பொறுப்புக் கூற வேண்டும் என்று குரல் பதிவொன்றை தொலைபேசி மூலமாக
அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவி;த்தார்.
சமூக
சேவை பணியில் ஈடுபட்டுவரும் வத்தளை, ஹுனுப்பிட்டி
பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மத் இஸ்மத் இதுதொடர்பாக கருத்து கூறியதாவது.
மத்திய
கிழக்கு நாடுகளில் மர்மமான முறையில் மரணமான பலரது பிரேதங்களை நாட்டுக்கு கொண்டு வரும்
சமூக சேவையில் நான் ஈடுபட்டு வருகிறேன். அங்கு எமது நாட்டு பெண்கள்; பலர் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். கொலை செய்யப்படுகின்றனர்.
ஆனால் அதுபற்றிய செய்திகள் முழுமையாக வெளிவருவதில்லை. உண்மைகள் வெளிவருவதில்லை. சகோதரி சியாமளி சந்தேகத்துக்கிடமான
முறையில் மரணமாகியுள்ளார். வெளிநாடுகளில் சந்தேகத்துக்கடமான முறையில் பெண்கள் அல்லது
ஆண்கள் மரணமாகும் போது அங்கிருந்து அனுப்பப்படும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலையே
மரணத்திற்கு காரணம் என அநேகமாக குறிப்பிடப்படுகிறது.
எமது நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு
தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று தெரிவித்தார்.
இதேவேளை
நீர்காழும்பு மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணமடைந்த பெண் கழுத்தில்
சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment