நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி
ஆரம்பிக்கப்பட்ட 1954 ஆம் ஆண்டு காலப்பபகுதியில் அதிபராக பணியாற்றிய பண்டிதர் கதிரேசர்மயில் வாகனனார் நூற்றாண்டு விழா மற்றும் அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும்
இலங்கை எழுத்தாளர் லெ. முருக பூபதியின் சொல்லத்
தவறிய கதைகள் மற்றும் சொல்ல வேண்டிய கதைகள்
ஆகிய இரண்டு நூல்களின் அறிமுக விழா நேற்று சனிக்கிழமை (9) மாலை நீர்கொழும்பு
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் பண்டிதரின் திருவுருவப்படம்
மாணவர் அணிவகுப்பு மற்றும் பேண்ட் வாத்தியத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
மங்கள விளக்ககேற்றலின் பின்னர் மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் முதல் அங்கம் ஆரம்பமானது.
தலைமை உரையை
அதிபர் என். புவனேஸ்வர ராஜா நிகழ்த்தினார்.
வரவேற்புரையை ஆசிரியை திருமதி சுசிலகுமாரி நீதிராஜா நிகழ்த்தினார்.
பின்னர்
முன்னாள் அதிபர் பண்டிதர் கதிரேசர் மயில் வாகனனார் பற்றி பழைய மாணவர் மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர் சு. நவரட்ன
ராஜா, கல்லூரியின் முன்னாள் அதிபர்களான என்.
கணேசலிங்கம், வீ. நடராஜா, முன்னாள் ஆசிரியை திருமதி திலகமணி ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றினர்.
கவிஞர் ப. விக்னேஸ்வரன் கவிதை வாசித்தார்.
பின்னர்
பிரான்ஸில் வெளியிடப்பட்ட பண்டிதர் நூற்றாண்டு மலர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
அறிமுகவுரையை பழைய மாணவர் மன்றத்தின் ஆட்சி மன்ற உறுப்பினர் முத்துலிங்கம் ஜெயகாந்தன்
நிகழ்த்தினார்.
நிகழ்வில்
அவுஸ்திரேலியா - இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்
ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சிலருக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் கல்லூரியின் ஆரம்ப கால வளர்ச்சியில் ஈடுபட்ட பணியாளர் அமரர் செல்லையாவின்
ஞாபகார்த்தமாக பிரான்ஸில் வதியும் அன்னாரின் புதல்வி ராணிமலர் செல்லையாவின் ஏற்பாட்டில்
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன
நிகழ்வின் இரண்டாவது அங்கமாக எழுத்தாளரும் ஊடகவியலாளருமான முருக பூபதியின் நூல்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
சொல்ல வேண்டிய கதைகள் நூலின் அறிமுக உரையை நுவரெலியா வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்
செல்வி பாமினி செல்லத்துரை நிகழ்த்தினார்.
சொல்லத் தவறிய கதைகள் நூலின் அறிமுக உரையை இலக்கிய
படைப்பாளியும், ஊடகவியலாளருமான கருணாகரன் நிகழ்த்தினார்.
நூல்களின் சிறப்புப் பிரதிகளை நீர்கொழும்பு இந்து
இளைஞர் மன்றத்தின் தலைவர். புp. ஜெயராமன், நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் பொருளாளர்
திரு. ஏகாம்பரம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்
1. பண்டிதரின்
திருவுருவப்படம் மாணவர் அணிவகுப்பு மற்றும் பேண்ட் வாத்தியத்துடன் ஊர்வலமாக எடுத்து
வரப்படல்
2. நூலாசிரியர்
முருக பூபதி உரை
3. வரவேற்புரை
ஆசிரியை திருமதி சுசிலகுமாரி நீதிராஜா
4. நீர்கொழும்பு
இந்து இளைஞர் மன்றத்தின் பொருளாளர் திரு. ஏகாம்பரம் சிறப்புப் பிரதி பெறுதல்
5. மாணவர்
ஒருவருக்கு கற்றல் உபகரணம் வழங்கக்பட்டல்
6. --
8 கலந்து கொண்டோர் சபையில்
No comments:
Post a Comment