நீர்கொழும்பு தளுபத்தை பல்லன்சேனை வீதியில் பிரான்சிஸ்
சாலிஸ் மாவத்தையில் உள்ள வீடொன்றிலிருந்து
இறந்த நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று (9) காலை மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கபட்ட தகவல் ஒன்றை அடுத்து கடந்த
மூன்று தினங்களுக்கு முன்னர் இறந்ததாகக் கருதப்படும் திருமணமான பெண் ஒருவரின் சடலமே
அழுகிய நிலையில் பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின்
வீட்டுக்கருகில் வசிப்பவர்கள் குறித்த வீட்டிலிருந்து துர்மணம் வீசுவதாக பொலிஸாருக்கு
தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் வீட்டின் அறையில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கீதிகா என்பவரே அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரது கணவர் ரொசான் (47 வயது) என்பவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். இறந்த பெண்ணின் வயது
45 வரை இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் அடிக்கடி சண்டை
ஏற்படுவதாகவும், இந்த வீட்டிற்கு அந்த தம்பதியினர் இரண்டு மாதங்களுக்கு முன்னரே வாடகைக்கு
வந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். கணவன் மனைவி இருவரும் உணவு விற்பனை கடைகளில் சமையல் வேலை செய்யும்
தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment