அல்பலாஹ் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் விவகாரம்
பிரதேச மக்கள் மத்தியில் பல்வேறு கருத்து முரண்பாடுகள்
நீர்கொழும்பு அல்பலாஹ் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹானுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையும் ,பிரதி அதிபரை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரியும் மகஜர்களில் கையொப்பங்கள் பெறப்பட்டதையும் தொடர்ந்து போருதொட்ட பிதேச மக்கள் மத்தியில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன,
ஜனாப் ஷாஜஹான் அல்பலாஹ் மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையை பொறுப்பேற்றது முதல் நிருவாக ரீதியிலும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையிலும்,பாடசாலையை ஊடகங்கள் வாயிலாக பிரபல்யப் படுத்துவதிலும் தனது முழுப்பங்களிப்பையும் வழங்கி பாடசாலையை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றமையை பொறுக்காத பாடசாலை ஆசிரியர்கள் சிலரும் (இவர்கள்தான் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் குழப்பவாதிகள், கற்பித்தல் நடவடிக்கைகளில் சரியாக ஈடுபடாமல் சும்மா இருப்பவர்கள்) , தமது இஸ்லாமிய ஜமாத் பிரிவை கம்மல் துறை பிரதேசத்தில் பிரசாரம் செய்யும் சுயநல நோக்கம் கொண்ட மதத் தலைவர்கள் சிலரும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலரும் ,அரசியல் இலாபம் தேடமுற்படும் சிலருமே , பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹான் மீது பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி அவரை இடமாற்றலாகி செல்லுமாறு வற்புறுத்தியும் அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர். .
இதற்கு ஆதாரமாக ,10-12-2010 அன்று பிரதேசத்தின் ஜும்மா பள்ளிவாசல்களில் பிரதி அதிபரை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரி மகஜர்களில் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளதன் பின்னணியில் பெரியமுல்லை பிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இருவர் இருப்பதாகவும் இவ்விவகாரத்தை அவர்கள் தமது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்துவதாகவும் பிரதேசமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அதேபோன்று பிரதேசத்தின் பெயரில் செயற்படும் இணையத்தளம் ஒன்று பிரதி அதிபர் ஷாஜஹானுக்கு எதிராக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாடசாலை ஆரம்பித்து 90 வருடங்கள் ஆகியுள்ள போதும் சகல விடயங்களிலும் பாடசாலை பின் தங்கியிருப்பதற்கு இது போன்றவர்களின் செயற்பாடுகளே காரணம் என்றும் இதற்கு முன்னரும் இப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள் பலர் விலகிச் சென்றமையை உதாரணம் காட்டி பாடசாலை ஆசிரியர்களும்,நகர முக்கியஸ்த்தர்கள் சிலரும் , பிரதேச மக்களும் உயரதிகாரிகளுக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர்.
அடுத்த வருடம் (2011) இப்,பாடசாலையில் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
.
No comments:
Post a Comment