15 பேரை காப்பாற்றிய சாந்த பிரியந்த
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கம்பஹா மாவட்ட கிளையின் உயிர் காப்பு வீர்ர்கள், அவர்ளை பயிற்றுவிக்கும் ஆலோசகர்ளை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு 30-12-2010 அன்று கம்பஹா மாவட்ட கிளையின் தலைமையக கட்டிடத்தில் இடம் பெற்றது.
நீர் பாதுகாப்பு வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந் நிகழ்வில் ஜேர்மன் செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் அன்ட்ரீஸ் லின்டர், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பிரிவுத் தலைவர் சுரேன் பீரிஸ், சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனத்தின் பிரதி நிதிகள் குழு தலைவர் பொப் மெக்ரோ, நீர் பாதுகாப்பு வேலைத் திட்டத்தின் இணைப்பாளர் ராஜீவ் கமகே உட்பட செஞ்சிலுவை சங்கத்தின் நிருவாக உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கம்பஹா மாவட்ட கிளையின் உயிர் காப்பு வீர்ர்களினால் கடந்த இரு வருடங்களில் 250 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுடள்ளதாக அங்கு அறிவிக்கப்பட்டது.நீர்கொழும்பு ,வத்தளை பிரீத்திபுர கடல் பகுதிகளில் இந்த உயிர் காப்பு வீர்ர்கள் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment