Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, April 29, 2012

நீர்கொழும்பில் நடந்த மக்கள் நடமாடும் சேவை


அரச சேவையை கிராமத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ்
நேற்று ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு நகரில் மக்கள் நடமாடும் சேவை இடம்பெற்றது.

காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்பட்ட இச்சேவையை நீர்கொழும்பு பிரதேச செயலாளர் காரியாலயத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.
பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன தலைமையில் நடந்த இந்நிகழ்வில் அமைச்சர் மேர்வின் சில்வா கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதில் 43 இற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் பங்கு பற்றி மக்களுக்கு இலவசமாக சேவைகளை வழங்கின.
பெரும் எண்ணிக்கையான பொது மக்கள் வருகை தந்து இதில் பயணடைந்தனர்.




No comments:

Post a Comment