எனக்கெதிராக
ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாக யாராவது நிரூபிக்க முடியுமானால் தேர்தலில் ஒரு
இலட்சத்து 52 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ள நான் ,மக்களிடம் தெரிவித்து விட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா
செய்து அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவேன் என்று மக்கள் தொடர்பு மக்கள்
அலுவல்;கள் அமைச்சர்
மேர்வின் சில்வா தெரிவித்தார்.
அரச சேவையை
கிராமத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'ஜனசெதம ஜனஹவுல' நடமாடும் மக்கள் சேவையில் கலந்து
கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்சொன்னவாறு
குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு
பிரதேச செயலகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வு நீர்கொழும்பு நிவ்ஸ்ட்டட்
மகளிர் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (28-4-2012) இடம்பெற்றது.
அமைச்சர் மேர்வின் சில்வா அங்கு தொடர்ந்து
உரையாற்றுகையில் கூறியதாவது,
மஹிந்த சிந்தனையின் அடிப்படையிலேயே இந்த
நடமாடும் மக்கள் சேவை உங்கள் காலடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று சிலர் சிலர்
பாண் இறாத்தலை கைகளில் தூக்கி வைத்துக்கொண்டு இருக்கின்றனர் . இன்னும் சிலர்
பெற்றோல் கலனை தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். வேறுசிலர் பல்வேறு விடயங்களை பற்றி
குறிப்பிடுகின்றனர். ஆனால் ஒருவராவது இந்த தமிழ் சிங்கள புத்தாண்டு தற்கொலை
புலிகள் இல்லாமல் யுத்தம் நிiறைவடைந்து மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற
புத்தாண்டு என்று கூறவில்லை.
இன்று மரக்கறி
வகைகள் விலை குறைந்துள்ளன. மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த புத்தாண்டு மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டதாகும். ஆனாலும் சில ஊடகங்கள்
வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடுகின்றன. மரக்கறிகள் புதைக்கப்படுகின்றன.
எரிக்கப்படுகின்றன என்றெல்லாம் செய்திகள் வெளியிடப்படுகின்றன. விவசாயிகள் நன்மையடைந்துள்ளனர்
என்பதே உண்மை .
நான் இன்னும்
இரண்டு மணித்தியாலங்களில் வெளிநாடு சென்று விடுவேன். ஆயினும் இந்த நிகழ்வுக்கு
வந்துள்ளேன். இல்லையேல் நான் பயத்தினால் வெளிநாடு சென்றதாக குறிப்பிடுவார்கள்.
ஏன்னிடம் பணம் இருக்கிறது அதனால் வெளிநாடு செல்கிறேன் வெளிநாடுகளில் என்னை வரவேற்க
மக்கள் இருக்கிறார்கள். நான் ஊடகங்கள் மீது அதிக அன்பு கொண்டவன். இலங்கையில்
ஊடகங்களில் பணியாற்றுவோர் ஆசியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே முன்னுதாரணமானவர்கள்.
எந்த விடயத்தை பற்றியும் எழுத அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. அவர்களுக்கு
ஆற்றல் இருக்கிறது.ஆயினும் எல்லாம் முழுமையாவவை என்று கூறக்கூடிய ஊடகம் எமது
நாட்டில் இல்லை.
என்னைப்பற்றி
பிழையான தகவல்களை சில தேசிய ஊடகங்கள் வெளியிடுகின்றன. சில ஊடகவியலாளர்கள்
எனக்கெதிராக பொய் செய்திகளை வெளியிடுகினறனர். எனக்கெதிராக ஊழல் குற்றச்சாட்டு
இருப்பதாக யாராவது நிரூபிக்க முடியுமானால்
தேர்தலில் ஒரு இலட்சத்து 52 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ள நான் மக்களிடம்
தெரிவித்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அரசியலிலிருந்து
ஒதுங்கி விடுவேன் .நான் ஒரு செக்கணும் இருக்கமாட்டேன். வீட்டுக்கு சென்றுவிடுவேன்.
என்னிடம் சிறிய சிறிய தவறுகள் இருக்கலாம். நான்
செல்லும் பயணத்தை நான் தொடர்வேன் .
சொல்வதை செய்வேன். மக்களுக்காக இறக்கும் வரை வாழுவேன் என்றார்.
இந்நிகழிவில்
பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்னவும் இங்கு உரையாற்றினார். வரவேற்புரையை
நீர்கொழும்பு பிரதேச செயலாளர் எச். கே.ஆர்.பலவத்த நிகழ்த்தினார்
No comments:
Post a Comment