நாட்டில் எயிட்ஸ்
நோய் பரவுவதைகட்டுப்படுத்தும் வகையில் கடற்கரைப் பையன்களுக்காக ( Beach
Boy)) மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டம்
தொடர்பாக விளக்கப்படுத்தும் வகையிலும், எயிட்ஸ் நோய் தொடர்பாக தெளிவு
படுத்தும் வகையிலும் நீர்கொழும்பு பெரடைஸ்
பீச்ஹோட்டலில் இன்று முற்பகல் 9 மணிமுதல்
பிறபகல் 2 மணிவரை கருத்தரங்கொன்று
நடைபெற்றது.
இக்கருத்தரங்கு
ஊடகவியலாளர்கள், பொலிஸார், வைத்தியர்கள், தெரிவு செய்யப்பட்ட பாடசாலை
ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கம்பஹா
மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் பத்மசிறி வைத்தியர்களான மகேஸ்ரத்நாயக்க
லயனல் அலககோன் ஜி.வீரசிங்க ஜயாதரி ரணதுங்க ஆகியோர் உரைகள் நிகழ்த்தினர்.
எமது நாட்டில் 1986 ஆம் ஆண்டு முதல்
தடைவையாக எயிட்ஸ் நோயாளி ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அன்று முதல் இன்று வரை
1503 எயிட்ஸ் நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவம்
அங்கு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கடற்கரை
பையன்களில் ( Beach
Boy)) 98 சதவீத்தினர் பணம் மற்றும் பொருள் ஈட்டும்
வகையிலேயே பாலியல் நடவடிக்கைகளை தொழிலாக மேற்கொள்வதாகவும் இது தொடர்பாக
அவர்களுக்கு ஏற்படும் பாலியல் நோய்கள் தொடர்பில் அறிவுறுத்தும் நடவடிக்கைகளும்
மருத்துவ ரீதியில் உதவி புரியும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும்
அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.
நீர்கொழும்பு மாவட்ட
வைத்தியசாலையின் பாலியல் நோய்கள் தொடர்பான பிரிவு இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
No comments:
Post a Comment