Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, May 29, 2012

பட்டாசு வெடித்ததில் தீக்காயங்களுக்கு உள்ளாகி பெண்மரணம்


பட்டாசுகளுக்கு லேபல் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த வயோதிபப் பெண்னொருவர் குப்பி விளக்கு வீழ்ந்து பட்டாசு  வெடித்ததில் தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி இன்று மரணமகியுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கட்டானை கோங்கொடமுல்ல பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளது.

223மற்றும் 26 வயதுடைய இரண்டு பெண் பிள்ளகைளின் தாயாரான முத்துகலகே சோமா ரஞ்சனி என்ற  56 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் பரிதாபகரமாக மரணத்தை தழுவியவராவார்.
பட்டாசுகளுக்கு லேபல் ஒட்டும் தொழிலை தொலிலை செய்து வந்துள்ள இவர்; மின்சார செலவை கட்டுப்படுத்துவதற்காக இரவு வேளைகளில் குப்பி விளக்கு வெளிச்சத்தில் லேபல் ஒட்டுவதைவதை வழக்கமாக செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அவரது பிள்ளைகள் இருவரும் பலமுறை கூறியுள்ள போதும் குப்பி விளக்கையே அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில்,; வழமை போன்று விட்டின் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை  இரவு 9.30 மணியளவில் குறித்த பெண் குப்பி விளக்கு வெளிச்சத்தில் பட்டாசுகளுக்கு லேபல் ஒட்ட ஆரம்பித்துள்ளார்.

நள்ளிரவு 11.30 மணியளவில் திடீரென்று பட்டாசுக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டு பிள்ளைகளும் குறித்த பெண்ணின் கணவரும் ஓடி வந்து பார்த்தபோது, தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அவர் இருப்பதை கண்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment