தேசிய பாதுகாப்பு
அமைச்சின் ஏற்பாட்டில் பொலிஸாரின் நலன்புரி வேலைத்திட்டமாக தொடர்ச்சியாக ஏற்பாடு
செய்யப்பட்டு வரும் 'சியபத்வில'
கருத்தரங்கு மற்றும் ஒன்று கூடல் நிகழ்வு
இன்று (27) முற்பகல் 9 மணிமுதல் நீர்கொழும்பு மாநகர சபையின்
குளிரூட்டப்பட்ட பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
நீர்கொழும்பு
பிராந்திய பொலிஸ் நிலையங்களை சேர்நத பொலிஸாருக்கு ஏற்;பாடு செய்யப்பட்ட
இந்நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் . பாதுகாப்பு அமைச்சின் மேலதிக
செயலாளர் திருமதி தமயந்தி ஜயரத்ன, பேராசிரியரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஆர்;.பி. சூரியபெரும,
பேராசிரியர் புஞ்சி நிலமே ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நீர்கொழும்பு
பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கலப்பத்தி.
நீர்கொழும்புக்கு பொறுப்பான பொலிஸ அதிகாரி ஆனந்த பெர்னாந்து உட்பட பொலிஸ்
பொறுப்பதிகாரிகள் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து
கொண்டனர்.
இந்நிகழ்வில் இசை
நிகழ்வும் இடையிடையே இடம்பெற்றது
No comments:
Post a Comment