Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, July 7, 2012

நீர்கொழும்பு கடற்கரையை ஆக்கிரமித்துள்ள சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டும். - ரொயிஸ் விஜித் பெர்னாண்டோ


 நீர்கொழும்பு கடற்கரையை ஆக்கிரமித்துள்ள சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டும் என்று மாநகர சபையளின் எதிர்;கட்சித் தலைவர் ரொயிஸ் விஜித் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மாநகர சபையின் இம்மாத அமர்வு வியாழக்கிழமை நடைபெற்ற
போது அதில் பிரேரணையை சமர்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது.,

நீர்கொழும்பில் கொச்சிக்டை முதல் பிட்டிபனை வரையான கடற்கரையில் மாநகர சபையின் அதிகாரிகளின் அனுமதிப் பெறப்படாமல கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் ஆக்கிரமித்துள்ளன.

பொது மக்கள் சுதந்திரமாக அனுபவிக்கக் கூடிய இடமான கடற்கரைப் பகுதிகளில் ஆளும் கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகளின் பூரணமான ஒத்துழைப்புடன் சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.இதன் காரணமாக பொது மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் உரிமையாளர்களும் கடலோரப் பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். இதன் காரணமாக கடற்பகுதிக்கு சொந்தமான பகுதிகள் குறைவடைந்துள்ளன. இதனால் கடற்கரைக்கு வரும் பொது மக்கள் பெரும் அளெகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

இது போன்ற சட்டவிரோத கட்டிடங்களை நிர்மாணித்துள்ளவர்கள் யார்? எந்தளவு காணி இவ்வாறு சட்டவிரோதமாக பயண்படுத்தப்பட்டுள்ளது? என்ற விடயங்கள் மாநகர ஆணையாளர் மூலமாக கண்டறியப்பட்டு அது தொடர்பான அறிக்கை அடுத்த மாத அமர்வின் போது சமர்ப்பிக்கப்ட வேண்டும் என்றார்.

மாநகர சபையின் எதிர்;கட்சித் தலைவர் ரொயிஸ் விஜித் பெர்னாண்டோவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் தரப்பை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment