இந்திய
றோலர்கள் மற்றும் அரச பாதுகாப்பு நடவடிக்கையினால் வடக்கு மீனவர் சமூகம் முகம்
கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வடக்கு தெற்கு இணைந்து எடுக்க வேண்டிய
நடவடிக்கைகள்; தொடர்பாக 'வடக்கு தெற்கு கலந்துரையாடல்’;; என்ற
மகுடத்தில் இன்று சனிக்கிழமை கலந்துரையாடல்
ஒன்று இடம்பெற்றது.
தேசிய
மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு தேசிய மீனவ ஒத்துழைப்பு
இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் அ.ஜேசுதாசன் தலைமையில் நீர்கொழும்பில் உள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு
இயக்கத்தின் தேசிய செயலக கேட்போர்;
கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்,
யாழ் மாவட்டத்தின் கடற்றொழிலின் தற்கால நிலைமை என்ற தலைப்பில் வடக்கு
கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.தவரத்தினம்ரையாற்றினார்.
மன்னார்
மாவட்டத்தின் கடற்றொழிலின் தற்கால நிலைமை என்ற தலைப்பில் வட மாகாண
கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பின் விஸேட பிரதிநிதி நிக்சன் உரையாற்றினார்.
கிளிநொச்சி
மாவட்டத்தின் கடற்றொழிலின் தற்கால நிலைமை என்ற தலைப்பில் வட மாகாண
கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பின் விஸேட பிரதிநிதி ஜோசப் பிரான்ஸிஸ் உரையாற்றினார்.
அத்துடன்
தென்னிந்திய றோலர்களினால் வடபுலத்து மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தாக்கம்
மற்றும் வாழ்வாதார பிரச்சினை என்ற தலைப்பில கலாநிதி சூசை ஆனந்தன் (யாழ் பல்கலை
கழகம்) உரையாற்றினார்.
தேசிய
மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேர்மன் குமார மேற்படி
பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தெற்கு
மக்கள் என்ற ரீதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
நிகழ்வின்
இறுதியில் பொதுக் கலந்துரையாடல் மற்றும் எதிர்கால திட்டம் என்ற தலைப்பில் "ரயிட்டுலைப்"(Right to Life)அமைப்பின் பிரதானி பிரிட்டோ பெர்னாந்து நிகழ்வை நெறிப்படுத்தினார்.
No comments:
Post a Comment