தனது வீட்டில் சட்ட
விரோதமான முறையில் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன்
சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிக்கப்
பயன்படுத்தப்பட்ட உபரணங்களை
கைப்பற்றியுள்ளதாக நீர்கொழும்பு
ஏத்துக்கால உல்லாசப் பயணத்துறை
பொலிஸார் இன்று
முற்பகல் தெரிவித்தனர்.
ஏத்துக்கால சாந்த
ஜோசப் வீதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது சந்தேக
நபர் கசிப்பு தயாரித்துக் கொண்டிருக்கையில் கைது செய்யப்பட்டதாகவும், அந்த நபர்
குறித்த விட்டின் உரிமையாளர் எனவும் உல்லாசப் பயணத்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்
பி.பெர்னாண்டோ தெரிவித்தார்.
சந்தேக நபரிடமிருந்து
20 போத்தல் கசிப்பு, 3600 கிராம் கோடா மற்றும்
கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
உப பொலிஸ் பரிசோதகர்
டி.எஸ் பி.பெர்னாண்டோ,பொலிஸ் சார்ஜன்ட்களான ஜீனா ஹஸீம், ரூபசிங்க மற்றும்
பொலிஸ்கான்ஸ்டபிள்களை கொண்ட குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்
சந்தேக நபரை நாளை
வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment