Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, July 17, 2012

காணி வழக்கொன்றுக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க இன்று நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றுக்கு வருகை


காணி வழக்கொன்றுக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க இன்று நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றுக்கு வருகை தந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் கணவரும், அரசியல்வாதியும், பிரபல நடிகருமான மறைந்த
விஜயகுமாரணதுங்கவிற்கு சொந்தமான சீதுவை மூக்கலங்கமுவவில் உள்ள இரண்டு ஏக்கர் காணி தொடர்பான வழக்கில் தனது இரண்டு பிள்ளைகளின் சார்பாக அவர் நிPதிமன்றுக்கு வருகை தந்திருந்தார்.;

குறித்த இரண்டு ஏக்கர் காணியை மறைந்த விஜயகுமாரணதுங்கவின் தாயாரான பியட்ரிஸ் கிளேரா தனது பேரப்பிள்ளைகளான யசோதரா குமாரணதுங்க, விமுக்தி குமாரணதுங்க (விஜயகுமாரணதுங்கவின் பிள்ளைகளுக்கு) ஆகியோருக்கு தனது இறுதி விருப்பப் பத்திரத்தில் எழுதிவைத்துள்ளார்.

தற்போது அந்த காணியின் ஒரு பகுதி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்மைக்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment