சுயதொழில் துறையில்
ஈடுபட்டுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சமுர்தி அதிகார சபை
நீர்கொழும்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த சுயதொழிலுக்கான
உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன் கிழமை நிர்கொழும்பு உடையார் தோப்பு பிரஜா
சேவை நிலையத்தில்
இடம்பெற்றது.
பிரதி அமைச்சர்
சரத்குமார குணரட்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தையல் இயந்திரங்கள்,
குளிர்சாதனப் பெட்டிகள், ஓவன், கிரைண்டர் உபகரணங்கள் என்பன நீர்கொழும்பு இரண்டாம்
சமுர்தி வலயத்தை சேர்;ந்த பெண்களுக்க வழங்கப்பட்டன.
அதற்கு முன்னதாக பிட்டிபனை
பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிட்டிபனை சமுர்தி வலயத்தை சேர்ந்த பெண்களுக்கு
இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.இந்த இரண்டு வலயங்களிலும் வழங்கப்பட்ட உபகரணங்களின்
பெறுமதி 120 இலட்சம் ரூபாவாகும்.
இந்நிகழ்வில்
நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஏ.ஆர். அலவத்த உட்பட பிரதேச செயலகத்தை சேர்ந்த
சமுர்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
சுயதொழிலுக்கான
உபகரணங்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தாம் பெற்றுக்கொண்ட உபகரணங்களின் 50 சதவிதத்தை வட்டி
இன்றிய இலகு தவணை முறையில் அந்த உபகரணங்களுக்கான பணத்தை செலுத்த வேண்டும் எனவும்
மிகுதி 50 சத வீதம் அரசாங்கத்தின் உதவியால் இலவசமாக
வழங்கப்படுவதாகவும்; அங்கு தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment