தனது முதல் மனைவிக்கு பிறந்த 12 வயது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த
தந்தையையும் அதற்கு உடந்தையாக இருந்த்தாக கூறப்படும் சந்தேக நபரின் இரண்டாவது மனைவியையும்
நீர்கொழும்பு மேலதிக நீதவான் ரஜேந்ரா யூ. ஜயசூரிய
எதிர்வரும் 9 (9-8-2012) ஆம் திகதி
நீர்கொழும்பு – கொச்சிக்கடை, போருதொட்ட பிரதேசத்தை சேர்ந்த மொகமட் ருவைஸ்
முகமட் சிராப்தீன் (32 வயது) , அவரது இரண்டாவது மனைவியான ரிகாயா பர்வின் ஆகியோரே விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.
மேசன் தொழில் செய்து வரும் பிரதான
சந்தேக நபர் இரண்டு திருமணங்கள் முடித்துள்ளவராவார். அவரது முதல் மனைவி
பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவராவார். முதல் மனைவி இருக்கும் போது அவர் இரண்டாவது
திருமணம் முடித்துள்ளார். சிறிது காலத்தின் பின்னர் முதல் மனைவியை அவர் பிரிந்த
போது, அவருக்கு முதல் மனைவி மூலமாக பிறந்த மகளை (பாதிக்கப்பட்ட சிறுமியை) உடன்
அழைத்து வந்து கொழும்பில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் சேர்த்துள்ளார். சில வருடங்களின்
பின்னர் சிறுமிக்கு அங்கு சுகயீனம் ஏற்படவே கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர்
சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இரண்டாவது மனைவிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். ஐந்தாவது பிள்ளைக்காக அவர்
கர்ப்பம் தரித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏழு மாத காலமாக சந்தேக நபர் தனது மகளை
பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இதனை தனது சிற்றன்னை 9சநதேக நபரின் இரண்டாவது
மனைவி) அறிந்திருந்ததாகவும் அந்த சிறுமி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமளித்துள்ளார்.
குறித்த சிறுமியின் பாடசாலை கல்வியும் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த நபரையும் அவரது இரண்டாவது மனைவியையும் பொலிஸார் கைது
செய்து நீதிமன்றில் ஆஜர் செய்த போதே,
சந்தேக நபர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதவான்
உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment