Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, August 4, 2012

வெலிஹேன பிரதேசத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த கசிப்பு தயாரிப்பு நிலையம் ஒன்றை சுற்றி வளைப்பு


நீர்கொழும்பு - வெலிஹேன பிரதேசத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த கசிப்பு தயாரிப்பு நிலையம் ஒன்றை சுற்றி வளைத்து சந்தேக நபர்கள் இருவரை கைது செய்யததுடன் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான சட்ட விரோத கசிப்பு மற்றும் கசிப்பு தாயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக
கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் வசந்த ஹேரத் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து வெலிஹேன பாத்திமா வீதியில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் இரகசியமாக செயற்பட்டு வந்த இந்த கசிப்பு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் வெலிஹேன பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

கோடா 21600 டிராம்ஸ,; கசிப்பு 360 டிராம்ஸ, சீனி 100 கிலோகிராம், டி.சி.எல். பக்கட்டுக்கள், கேஸ் சிலிண்டர் , அடுப்பு உட்பட கசிப்பு தயாரிக்கப்பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரசோதகர் நிசாந்த ஹேரத்தின் ஆலூசனையில் பொலிஸ் பரிசோதகர் வசந்த ஹேரத் தலைமையிலான குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினர் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளனர்.








No comments:

Post a Comment