Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, August 3, 2012

தீமிதிப்பின் போது தீக்குழியில் விழுந்த பெண் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பு


நீர்கொழும்பு தலாதீவு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயில் திருவிழாவையிட்டு  இடம் பெற்ற தீ மிதிப்பு நிகழ்வின் போது பெண்னொருவர் தீக்குழியில் விழுந்து தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (2-8-2012) வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கடோல்கலே பிரதேசத்சை; சேர்ந்த 57 வயதுடைய பெண்னொருவரே தீக்காயங்களுக்கு உள்ளானவராவார்.

தீ மிதிப்பு நிகழ்வின் போது குறித் பெண் அணிந்திருந்த சேலையில் கால் இடறி அவர் தீக்குழியில் வழுந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து தீ மிதிப்பு  நிகழ்வு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

தலாதீவு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயில் திருவிழா புதன் கிழமை (1-8-2012) மாலை இடம்பெற்றது குறிபிடத்தக்கது.


No comments:

Post a Comment