முன்னாள்
இராணுவ தளபதி சரத் பொன்சேகா நேற்று (1-8-2012)
மாலை நீர்கொழும்பு வடக்கு கட்டானையில்
அமைந்துள்ள எட்வின் சில்வா விபக்சன பெளுத்த தியான மத்திய தியான மத்திய
நிலையத்திற்கு தனது பாரியார் அனோமா பொன்சேகாவுடன் சென்று மதவழிபாட்டில்
ஈடுபட்டார்.
முன்னாள்
பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்த தியான மத்திய
நிலையத்திற்க வருகை தந்திருந்தார்.
முன்னாள்
பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற பௌர்ணமி தின பூஜை வழிபாட்டில்
குறிப்பிட்ட எண்ணிக்கையான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு
ஊடகஙகளுக்கு கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா ஒழுக்கவிழுமியங்கள் நிறைந்ததொரு
நாட்டை உருவாக்கவும் அடக்கு முறை இலஞ்சம் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்கவுத்
தன்னுடன் இணையமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment