வென்னப்பபுவ
பிரதேச சபைக்கு உட்பட்ட தெற்கு வயிக்கால் சிவில் பாதுகாபபு குழுவினரால்
அப்பிரதேசத்தில் ரயில் வீதி அருகில் குடிசையொன்றில் வாழ்ந்து வரும் வறிய
குடும்பமொன்றுக்கு 5 இலட்சம் ரூபா பெறுமதியான வீடொன்று அன்பளிப்பு
செய்யப்பட்டது.
இந்நிகழ்வு
நேற்று புதன் கிழமை(1-8-2012) முற்பகல் இடம்பெற்றது.
சிவில்
பாது காபபு குழுவினர் பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் பரோபகாரிகள் ஆகியோரின்
உதவியுடன் 5 இலட்சம் ரூபா செலவில் இந்த வீடு கட்டி
முடிக்கப்பட்டுள்ளது.இந்த வீட்டை பெற்றுக் கொண்ட விக்டர் பெர்னாந்து தம்பதியினர்
கூலித் தொழிலாளர்கள் ஆவர்.
அவர்களின்
ஒரே மகனான டிரோன் பெர்னாந்து ரஜரட்ட பல்கலைகழகத்தில் முகாமைத்துவ பீடத்தில்
இரண்டாம் வருட மாணவனாவார்.
மிக
வறிய நிலையில் குடிசை ஒன்றில் வாழ்ந்தபடி பல்கலைகழக பட்டப்படிப்பை தொடரும் அந்த
பல்கலைகழக மாணவனை கௌரவிக்கவும் பிரதேசத்தில் உள்ள மிக வறிய குடும்பமொன்றுக்கு உதவி
செய்யும் நோக்கிலும் இந்த வீட்டை கட்டி அன்பளிப்பு செய்ததாக சிவில் பாதுகாப்பு
குழுவின் தலைவர் ஹென்ரி எல்பர்ட் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு
வென்னப்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோக்க வீரக்கொடி, வென்னப்புவ பிரதேச சபை
உறுப்பினர்அலெக்ஸ் நிசாந்த, எதிர்கட்சித் தலைவர் ஜுட்பெர்னாந்து, தெற்கு வயிக்கால்
சிவில் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலர் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment