Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, August 29, 2012

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 39 பேருக்கு பிணை : 4 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்


படகுகள் மூலமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட 39 பேரை, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி. அமரசிங்க தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில்
விடுதலை செய்ய இன்று புதன் கிழமை உத்தரவிட்டார்.
அத்துடன் ,சந்தேக நபர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு உதவி ஒத்தாசை புரிந்த  நான்கு சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

படகுகள் மூலமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 43 பேர் கொண்ட குழுவினரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்த போதே 39 பேருக்கு பிணை வழங்கியதுடன் நால்ரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்தவர்களாவர்.

இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


No comments:

Post a Comment