சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட போது
கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை பாராளுமன்ற
உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன நேற்று (27-8-2012) பார்வையிட்டார்.
நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கெலிசன் ஜயகொடி, மாநகர சபையின்
முன்னாள் உறுப்பினரும் ஐ.,தே. கட்சியின் நீர்கொழும்பு முகாமையாளருமான பிரதீப் பீரிஸ் உட்பட கட்சியின் உள்ளூர் செயற்பாட்டாளர்கள்
சிலர் உடன் சென்றிருந்தனர்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் 150 முதல் 200 பேர் தடுத்து
வைக்கப்பட்டிருப்பதாகவும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 1600 பேர் தடுத்து
வைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் கொலைக்காரர்களோ போதைப்பொருள் குற்றவாளிகளோ
அல்ல எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.
தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவே அவர்கள் சட்ட விரோதமான
முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்,வழக்கு விசாரணை
மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு விரைவில் பிணை வழங்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பாக
நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளதாகவும் டாக்டர் ஜயலத் ஜயவர்தன மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment