போற்றுதலுக்குரிய மடுமாதாவின் பக்;தியை வளர்க்கும்
நோக்கில் மன்னார் மடு திருத்தளத்திலிருந்து
கொண்டு வரப்பட்ட மடுமாதா உருவச்சிலையை வைத்து நீர்கொழும்பில் நடத்தப்பட்ட
ஜெபமாலை வழிபாட்டு நிகழ்வில் மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் கலந்து கொண்டார்.
நீர்கொழும்பு
மடுதேவாலய உற்சவ ஏற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு இன்று (31-8-2012)
வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பிரபல வைத்தியர் பேர்டினன்டின் இல்லத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற
உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன, , அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் மற்றும்
நீர்கொழும்பு வாழ் கத்தோலிக்க மக்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்..
மன்னார்
பேராயர் இராயப்பு ஜோசப் அங்கு உரையாற்றுகையில் நாட்டில் நீண்ட காலமாக
தீரக்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும்
சமாதனத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment