நீர்கொழும்பு
தினச் சந்தை வியாபாரிகளால் வருடாந்தம் நடத்தப்படும் ' இப்தார்' நோன்பு திறக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (9)
மாலை
இடம்பெற்றது.
நீர்கொழும்பு
சிறப்புச் சந்தையில்சுப்பர் மார்க்கட்)
இடம்பெற்ற இந்நிகழ்வு சிறப்புச் சந்தையிலும்
அண்மித்த பகுதிகளிலும் வியாபரத்தில்
ஈடுபட்டுள்ள முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்காக ஏனைய வியாபாரிகளாலும்
வர்த்தகர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
நீர்கொழும்பு
நகரில் நிலவும் சமயங்களுக்கடையிலான ஒற்றுமையையும் இயல்பு வாழ்கையையும்
தொடர்ந்தும் கொண்டு செல்வதே இந்த நிகழ்வின்
குறிக்கோளாகும் என் வியாபாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment