ஆளில்லாத வீடுகளில் ஒருவருக்கும்
தெரியாமல் உட்புகுந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அண்மித்த பணம் , நகை , உபகரணங்கள்
மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடி வந்த நபர் ஒருவரை, நீர்கொழும்பு
குற்றத்தடுப்புப்
பிரிவு பொலிஸார் நேற்று
(14) செய்துள்ளனர்.
மினுவாங்கொட ,
உன்னாருவ பிரதேசத்தை சேரந்த 26 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளவராவார்.இவர் இரணடு
பிள்ளைகளின் தந்தையாவார்.
சந்தேக நபர் 2007 ஆம் ஆண்டு முதல் இந்த திருட்டுச் செயலை புரிந்து
வந்துள்ளதாகவும், பகல் வேளைகளிலேயே திருடி
வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டு வாயில் வெளிப்பக்கமாக பூட்டினால்
பூட்டப்பட்ட வீடுகளிலேயே இவர் திருடி வந்துள்ளார். அந்த வீடுகளில் அநேமாக ஒருவரும்
இருப்பதில்லை என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்
மெத்தை வியாபாரி ,மீன் வியாபாரி மற்றும் மேசன்
வேலை செய்வது போன்று போன்று சென்று
ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு, பின்னர் அந்த வீடுகளுக்குள் புகுந்து சந்தேக நபர்
திருடி வந்துள்ளார்.
அமெரிக்க,
சிங்கப்பூர் டொலர்கள் நகைகள் மற்றும் விலையுயர்ந்த வீட்டு உபகரணங்கள் மற்றும்
பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. திருப்பட்ட நகைகளின் ஒரு பகுதி
அடகு வைக்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களிலிருந்தும் மீட்கப்பட்;டுள்ளன.
நீர்கொழும்பு,
அஸ்கிரிய, கொட்டுகொட ,மினுவாங்கொட, கெலும்மஹர, சீதுவை , ஜா-எல, ஏக்கல, கம்பஹா,,ஆகிய
பிரதேசங்களில் உள்ள வீடுகளிலேயே சந்தேக நபர் இந்த திருட்டுச் செயலை புரிந்து
வந்துள்ளார்.
நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி சுபாஷ் பிரியதர்சனவுக்கு
கிடைத்த இரகசியத் தகவலில் போரில், நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான
பொலிஸ் அதிகாரி சந்த கலப்பதி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஓ.டப்ளியூ சில்வா
மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவ ஆகியோரின்
வழிகாட்டலில்
குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சந்தேக
நபரை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment