Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, August 17, 2012

நீர்கொழும்பு களப்பும் அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பும்


வந்தாரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்று போற்றப்படும்  நீர்கொழும்பு நகருக்கு பேரழகு சேர்க்கும் பெருமை பெற்றது நிர்கொழும்பு களப்பாகும். அது இயற்கையின் கொடையாகும்.
மேல்மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு களப்பாகவும், இலங்கையின் மிகப்பெரிய களப்பாகவும் கருதப்படும் இந்த களப்பு
நாளுக்கு நாள் மாசடைந்து வருவதாகவும்,களப்பு இடங்கள் சட்டவிரோதமான முறையில் மண்ணிட்டு நிரப்பப்பட்டு கைப்பற்றப்பட்டு வருவதாகவும்  சுற்றாடல் நிபுணர்களும் ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர் .


3.164 ஹெக்டேயர் பரப்பில் பரந்து விரிந்துள்ள  நீர்கொழும்பு களப்பை அண்டியதாக 3500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்குடும்பங்கள் களப்பை பிரதானமாகக் கொண்டே மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றன. 3500 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் களப்பில் மீன்பிடித் துறையில் ஈடுபட்டுள்ளதுடன 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அவர்களை அண்டி வாழ்கின்றனர்.


கம்பஹா மாவட்டத்தில், கொழும்பிலிருந்து வடக்கே 30 கிலோ மீற்றர் தூரத்தில் நீர்கொழும்பு நகரில் களப்பு அமைந்துள்ளது. இது 12. 5 கிலோ மீற்றர் நீளத்தையும் 3.6 கிலோ மீற்றர் அகலத்தையும் 0.65 மீற்றர் ஆழத்தையும் கொண்டதாகும்.

இந்த களப்பு பகுதியில் 29 வகையான தாவர வகைகளும், ஆறு வகையான கடல்வாழ் உயிரினங்களும், ஏழு வகையான மீனினங்களும், நான்கு வகையான பறவை இனங்களும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகளின் மனங்கவர்ந்த இடமாகவும் களப்பு காணப்படுகிறது

பல்வேறுபட்ட சிறப்புகளைக் கொண்ட களப்பு நாளுக்கு நாள் மிகப்பெரிய அளவில் மாசடைந்து வருகிறது.பல்வேறுபட்ட மனிதர்களின் செயற்பாடே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.




முன்னர் இந்த களப்பில் காணப்பட்ட உயிரினங்கள் பல இன்று முற்றாக அழிந்து போயுள்ளன.சில அழியும் அபாயத்தில் உள்ளன. களப்புக்கு அழகு சேர்க்கும், கடல் வாழ் உயிரினங்களின் பெருக்கத்திற்கும் துணைபுரியும் கடற்தாவரங்க்ள பல அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன.
களப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை இரண்டாகப் பிரிக்கலாம்.


(1 ) உயிரியல் அடிப்படை

(கடற்தாவரங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, மீனினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, இறால் , நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு) 

(2) பௌதீக அடிப்டை

(களப்புப் பகுதிகள் மண்ணீட்டு நிரப்பபடல், களப்பினில் குப்பைக் கூழங்கள் கொட்டப்படுதல், கழிவு நீர் களப்புக்கு அனுப்பப்படுதல், எண்ணெய் மற்றும் ஏனைய கழிவுகள் களப்புடன் களக்க விடப்படல்)

நீர்கொழும்பு களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கடோலான கடற்தாவர அளிப்பு . சட்ட விரோதமாக களப்பை மண்ணிட்டு நிரப்புதல் மற்றும் குப்பை கூலங்களை களப்பினில் இடல் போன்ற காரணங்களினால் மீனவர்களுக்கும் சுற்றாடலுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.






பிரதேச அரசியல்வாதிகள் ஒருசிலரின் ஒத்துழைப்புடன் களப்புப் பகுதியில் சட்டவிரோதமாக மண் நிரப்பப்பட்டு வீடுகள் மற்றும் ஹோட்டல்கள் கட்டப்படுவதாவும் இதன் காரணமாக  மீன்கள்; குறைந்து களப்பு மீன் பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.





அகில இலங்கை மீனவ சமூக தொழிற்சங்கத்தின் முக்கியஸ்த்தர் அருண ரொசாந்த. இது தொடர்பாக தெரிவிக்கையில்,



களப்பு காரணமாவே, நீர்கொழும்பு கடல் பகுதி காப்பாற்றப்படுகிறது. கடற்தாவரங்கள அழிக்கப்படுவதால் மீனினங்களின் பெருக்கத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்கும்,சிறிய மீன்குஞ்சுகளின் பாதுகாப்புக்கும் கடற்தாவரங்கள் அவசியமாகும்..களப்பில் ஏற்படக் கூடிய பாதிப்பு சிறு மீன் பிடித்துறையில் உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது.மீன் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு நுகர்வோரையும் பாதிக்கிறது.

நீர்கொழும்பு களப்பினில் 3500 மீனவர்கள் மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளனர். களப்பு யாருக்கு சொந்தமானது என்பது கூட சந்தேகமாக உள்ளது.இது தொடர்பாக ஏதும் பிரச்சினை ஏற்படும் போது அரச அதிகாரிகளும் பொலிஸாரும் கைகளை விரிக்கின்றனர். என்றார்.
.
நீர்கொழும்பு சுற்றாடல் ஒன்றியத்தின் தலைவர் ரமேஸ் நிலங்க இது தொடர்பாக தெரிவிக்கையில்.



வீடில்லா பிரச்சினை காரணமாக சிலர் களப்பை மண்ணிட்டு நிரப்பி இடங்களை கைப்பற்றி வீடுகளை அமைத்துக்கொள்கின்றனர். மீனவர்கள் சிலரும் தமது சுயநலனுக்காக இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.
அரசாங்க உத்தியோகத்தர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்கள்.அவர்கள் அரசியல்வாதிகளுடன் இணைந்து கொண்டு சுயநலமாக நடந்துகொள்ளக்க கூடாது என்றார்.

நீர்கொழும்பு ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பை சேர்ந்த மிலீனா குமாரி இது தொடர்பாக தெரிவிக்கையில்,


களப்பினில் குப்பைகளை இடல் , கழிவு நீரை அகற்றல் போன்ற காரணங்களினாலும் கடற் தாவரங்ளை அழிப்பதினாலும் களப்பின் ரம்மியத் தன்மை இல்லாமற்போகிறது.
களப்பை மீனவர்கள் தமது தாயாகவே கருதுகின்றனர் என்றார்.

நீர்கொழும்பு நகருக்கு பேரழகு சேர்க்கும் பெருமை பெற்ற களப்பை பாதுகாப்பது எல்லோரதும் கடமையும் பொறுப்பும் அல்லவா?

கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed                          

No comments:

Post a Comment