Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, August 24, 2012

வெளிநாட்டு எண்ணெய் கப்பலிலிருந்து கசிவு நீர்கொழும்பு மோரவல கடற்பரப்பில்


பானந்துறை கடற்பரப்பில் மூழ்கிய சைப்ரஸுக்கு சொந்தமான கப்பலிலிருந்து கசிந்த எரிபொருள் கொழும்பின் மேற்குப் பகுதி கடற்பரப்பில் பரவிச் செல்வதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


தற்போது நீர்கொழும்பு கடற்பரப்பிலிருந்து 200 மீற்றர் தொலைவில் எண்ணெய் இவ்வாறு பரவிச் செல்வதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதேவேளை,பாணந்துறை கடலில் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு எண்ணெய் கப்பலிலிருந்து கசிந்த்துள்ளதாகக் கருதப்பபடும் எண்ணெய்க் கசிவு நீர்கொழும்பு - பிட்டிபனை - மோரவல கடற்பகுதியிலும் கரையிலும் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

 இதனை அடுத்து இன்று காலை மோரவல கடற்பகுதிக்கு நீர்கொழும்பு பிரதேச செயலாளர் பி.ஆர். டி.அலவத்த, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள்  மற்றும் சுற்றாடல் அதிகாரிகள் விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இந்த எண்ணெய்க் கசிவு பாணந்துறை கடலில் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு கப்பலிலிருந்து வெளியிடப்பட்டுள்ள எண்ணெய்க் கசிவாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.







No comments:

Post a Comment