Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, September 18, 2012

கடற்கரையில் கொள்ளை முயற்சி: நைஜீரிய நாட்டவர் ஆசிரியர், மாணவர் உட்பட நால்வருக்கு அக்டோபர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியல்


குடி போதையில் நைஜீரிய நாட்டவர் ஒருவரை தாக்கி செல்லிடத் தொலை பேசியை கொள்ளையிட முயன்றதாகக் கூறப்படும்  சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரையும் மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான்
ஏ.என். எம்.பி. அமரசிங்க இன்று உத்தரவிட்டார்.
அத்துடன்  ஆசிரியரையும் மாணவர்கள் இருவரையும் தாக்கியதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் பேரில் குறித்த நைஜீரிய நாட்டவரையும் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
;.
நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரைப் பூங்காவில் நேற்று இரவு 9 மணியளவில் நைஜீரிய நாட்டவர்   ரஸ்ய நாட்டு பெண்னொருவருடன் இருந்த போது குடி போதையில் இருந்த சந்தேக நபர்கள் மூவரும் நைஜீரிய நாட்டவரை அச்சுறுத்தி அவரிடமிருந்த செல்லிடத் தொலை பேசியை கொள்ளையிட முயன்றதாக ஏத்துக்கால உல்லாசப் பயணத்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து ஆசிரியரையும் மாணவர்கள் இருவரையும் பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

பின்னர் நைஜீரிய நாட்டவர் தம்மை தாக்கியதாக சந்தேக நபர்கள் மூவரும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நைஜீரிய நாட்டவரும் கைது செய்யபட்டு நால்வரும் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்ட போதே நால்வரையும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களான ஆசிரியரும் மாணவர்களும் சம்பவம் இடம்பெற்ற போது குடிபோதையில் இருந்தனரா என்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment