நான்கு இலட்சம்
ரூபா பெறுமதியான ஆறு கிலோகிராம் கஞ்சாவுடன்
நபர் ஒருவரை இன்று அதிகாலை கைது செய்ததாக நீர்கொழும்பு பொலிஸார்
தெரிவித்தனர்.
மடம்பெல்ல
பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நிலத்தின் கீழ் பங்கருக்குள் மறைத்து வைக்கப்பட்ட
நிலையில் ஆறு கிலோகிராம் கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கைது
செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இராணுவத்திலிருந்து சட்ட ரீதியாக விலகிய முன்னாள்
இராணுவ வீரராவார். இவர் நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு n பாலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் ஆலோசனையின்படி இலஞச ஒழிப்புப் பிரிவினர் சந்தேக
நபரை கைது செய்ததுடன் கஞ்சா போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment