நீர்கொழும்பு
ஏத்துக்கால கடற்கரைப் பூங்கா அமைந்துள்ள கடலில் மூழ்கி 24 வயதுடைய இளைஞர்
ஒருவர் மரணமாகியுள்ளார்.
இச்சம்பவம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (16-9-2012) இடம்பெற்றுள்ளது.
கதிரானை
பிரதேசத்தை சேர்ந்த பி.ஏ.கயான் சம்பத் முனசிங்க என்ற திருமணமாகாத இளைஞரே
சம்பவத்தில் பலியானவராவார்.
இவர் தனது
நண்பர்கள் நால்வருடன் கடலுக்கு சென்ள்ளார். இதன்போது நண்பர் ஒருவருடன் கரையில் நின்றவாறு கால்
கழுவிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கடலலை வந்து அந்த இருவரையும் அள்ளிச்
சென்றுள்ளது.
இந்நிலையில்
அங்கிருந்த உயிர்காப்பு வீரர்களால் அவர்கள் மீட்கப்பட்ட போதும் அவர்களில் ஒருவர்
மரணமாகியுள்ளார்.இவரின் இறுதிச்சடங்கு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment